மின்மாற்றிகள் வெடிப்புக்கு சதி வேலைகள் காரணமாம்!!

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்புகளுக்கு சதி வேலைகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிராகரித்து விட முடியாது என ஜேர்மன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பியகம, கொட்டுகொட பிரதேசங்களின் மின்மாற்றிகள் அண்மையில் வெடித்தன. இதனால் நாடு முழுவதும் சில நாட்கள் நீண்ட நேர மின் தடை ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த மின்மாற்றிகள் எப்படி வெடித்தன என்பது குறித்து ஆராய ஜேர்மனின் நிபுணர் குழு இலங்கை வந்து ஆய்வு நடவடிக்கைளில் ஈடுபட்டது.

மின்மாற்றியின் குழாய் மாற்றிகளின் தன்னியக்க செயற்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சினையே வெடிப்புக்குக் காரணம். பியகம மின்மாற்றி வெடித்த போது கடமையில் இருந்த பணியாளர் அங்கிருக்கவில்லை. இருந்திருந்தால் அவர் மரணமாகியிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

Related Posts