மின்னல்தாக்கமே மின் தடைக்குக் காரணமாம்!

இலங்கை முழுவதும் நேற்று பிற்பகல் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

இயல்வு வாழ்க்கையில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. லக்‌ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின்நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்வழங்கும் 33,000 வோல்ட் மின் தொகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இம்மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் கம்பிகளில் மின்னல் தாக்கியமையே குறித்த மின்தடைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts