மின்சார சேவை ஊழியர்களின் போராட்டம் தொடரும்!

மின்சார சேவை தொழிற்சங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

நேற்று மாலை மின்சார சேவை தொழிற்சங்கத்துடன் தொழில்துறை அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே. செனவிராத்ன பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது தம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை அதிகாரிகள் வழங்கவில்லை என்று இலங்கை மின்சார சபையின் கூட்டுத் தொழிற்சங்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கூறினார்.

தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு எழுத்துமுல தீர்வு வழங்கும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts