மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் கடந்த 8 நாட்களாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று ( புதன்கிழமை) இரவு நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூட்டுத் தொழிற்சங்க அமைப்பு அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சகலரும் வழமை போன்று சேவைக்கு சமூகம் தருமாறு அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

அமைச்சர் ஜோன் செனவிரத்னவுடனான பேச்சுவார்த்தையின் பின்னர், ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். இதனையடுத்தே கூட்டுத் தொழிற்சங்க அமைப்பு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக தொழிலாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Posts