மின்சார உற்பத்தி நிலையத்தினை மூடும்படி கோரி வைத்தியர்கள் உண்ணாவிரதம்!

இலங்கை மின்சார சபையின் நொதேன் பவர் என்னும் தனியார் நிறுவனத்தால் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் கழிவு ஓயில் சுன்னாகம் பகுதியையும் தாண்டி வேறு பகுதிகளுக்கும் பரவிவரும் நிலையில் இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மருத்துவர்கள் சிலர் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பருத்தித்துறைப் பிரதேசத்துக்கு ஒயில் வருவதைத் தடுக்கும் முகமாக பருத்தித்துறை வைத்திய அதிகாரி டாக்டர் செந்தூரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அளவெட்டி, மாவட்ட வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் கமலநாதன், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சச்சிதானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

poraddam-doctors-eb-1

poraddam-doctors-eb-2

Related Posts