மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்திவலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் எதிர்காலத்திலும் எதிர்பார்ப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவாக இருக்கின்ற போதும், தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு அதிக செலவு ஏற்பட்டாலும் மின்சார விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.