மின்சாரத்தை பெற்று தருமாறு வளலாய் பகுதி மக்கள் கோரிக்கை

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதி மக்கள் மின்சாரவசதி இன்றி பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

333 குடும்பங்கள் மீள்குடியேற பதிவு செய்துள்ள நிலையில் 64 குடும்பங்கள் நிரந்தமாக குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தாம் மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட் வில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.

கிடைக்கபெற்ற தற்காலிக கூடாரங்களில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மின் இணைப்பு வேலைகள் செய்து பூர்தியாகியுள்ளன.

மேலும், மின்சார கம்பங்கள் நாட்டப்பட்டு கிராமத்திற்குள் மின் வடங்கள் நடப்பட்டுள்ளன. ஆனால், உரிய அதிகாரிகள் மின் இணைப்பை வழங்க தாமதப்படுத்துவதாக இப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்தனர்.

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் விச ஜந்துகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளது. சிறிய கூடாரத்தில் வாழ்ந்து வரும் இவர்கள் மின்சாரம் இல்லாது குப்பி விளக்கில் வாழ்ந்து வருகின்றனர்.

மின்சார வசதியினை ஏற்படுத்தி கொடுத்தால் மீள்குடியேறாமல் இருக்கும் ஏனைய குடும்பங்களும் இங்கு வந்து குடியேறுவார்கள் எனவும் இது தொடர்பில் பிரதேச செயலர் அக்கறைக்கொண்டு மின்சாரத்தினை பெற்று தருமாறு வளலாய் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts