மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோருக்கு மேலும் சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மின்சார சபைக்கு வழங்கும் உதவி என்னவென்றால், வழமையை விட ஒரு மின்விளக்கை அணைத்து வைப்பதாகும். டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாத மின் கட்டணத்தை 10 வீதத்தால் குறைத்துக் கொள்பவர்களுக்கும், ஜனவரியை விட பெப்ருவரி மாதத்தின் கட்டணத்தை 10 வீதத்தால் குறைத்துக் கொள்பவர்களுக்கும் மின்சார சபை 10 வீத கழிவை வழங்கும் என மின்சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதனால், தனக்கும், நாட்டுக்கும், வறட்சியினால் துன்பப்படும் மக்களின் கஷ்டத்திலும் பங்களிப்புச் செய்தவர்களாக நீங்கள் மாறுவீர்கள் எனவும் அமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார்.