மின்சாரசபைக்கு எதிராக பாவனையாளர்கள் மூவர் வழக்குத்தாக்கல்

இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு எதிராக மின்பாவனையாளர்கள் மூவர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக யாழ்.மவட்ட நீதிமன்றப் பதிவாளர் எஸ். ரெட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டத்தில் சட்ட விரோத மின்பாவனையாளர்கள் அண்மையில் கைது செய்தமை தொடர்பாக பிரபல வர்த்தகர்கள் இந்த வழக்கைத் தொடுத்திருப்பதாகவும் அவர்களுக்கான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ்.நீதவான் ஆ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மின்பாவனையில் ஈடுபட்ட 156 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டு தலா 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.இந்த மின்பாவனையாளர்களில் மூவர் தாம் கைது செய்யப்பட்டது முறையற்றது எனவும் தங்களுக்கு எதிரான குற்றம் சோடிக்கப்பட்டது எனக்கூறி இந்த வழக்கை இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்துள்ளதாக பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts