மின்சாரக் கட்டணத்தை மாதாந்தம் செலுத்த தவறும் நுகர்வோருக்கு விடுக்கப்படும் சிவப்பு அறிவித்தலுக்குப் பதிலாக இனிமேல் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்)அனுப்புவது என மின்சாரசபை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்தம் மின் கட்டணத்தைச் செலத்தாத பாவனையாளர்களது மின்சார இணைப்பைத் துண்டிப்பது தொடர்பில் முன்கூட்டியே விடுக்கப்படும் சிவப்பு அறிவித்தலை இனிமேல் விடுக்காமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொலைபேசி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகளின் பின்னர் எஸ்.எம்.எஸ் முறைமையை நுகர்வோருக்கு அறிமுகம்செய்வது எனவும் சபை ஆலோசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முறைமையின் ஊடாக பெருந்தொகையான நிதியை மீதப்படுத்திகொள்ளலாம் என்றும் சபை அறிவித்துள்ளது.