மின்சாரக்கட்டணத்தை அதிகரிப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என்று மின்சக்தி மற்றும் நிலைபேறான சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார் .
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மோசடிகள் வெளிப்படைத் தன்மையற்ற கேள்விப் பத்திர முறைமையும் அமுலானதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். அரசாங்கம் ஆரம்பித்துள்ள கேள்விப் பத்திர முறைமை தொடர்பில் எந்தவொரு சவாலும் முன்வைக்கப்படவில்லை.
அரசாங்கம் வலுசக்தித் துறையை வெளிப்படைத் தன்மையுடன் கட்டியெழுப்பியிருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டினார். எதிர்காலத்திலும் வலு சக்தித் துறையில் வெளிப்படைத் தன்மை பாதுகாக்கப்படும் என பிரதியமைச்சர் மேலும் கூறினார்.
கெரவலப்பிற்றிய மின் நிலையத்தின் நிர்மாணப் பணி வெளிப்படைத் தன்மையுடன் கேள்விப் பத்திர முறைக்கு அமைய இடம்பெறுகின்றது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு அடுத்ததாக இலங்கையில் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய அனல் மின் நிலையம் இதுவாகும். இதன் மூலம் 300 மெகா வொட் மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.