மினி சூறாவளியினால் சேதமடைந்த வீடுகள் இராணுவத்தால் புனரமைப்பு

mallakam_campமல்லாகம் கோணப்புலம் முகாமில் நேற்றயதினம் காலை திடீரென வீசிய மினி சூறாவளியினால் முழமையாக பாதிக்கப்பட்ட ஐந்து வீடுகளில் நான்கு வீடுகளை இராணுவத்தினரினால் கட்டி மீள வழங்கப்பட்டுள்ளது.

இடம் பெயாந்தோர் நலன்புரி நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள பனை மரங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வீடுகள்சேதம் அடைந்ததுடன் ஐந்து வீடுகள் முழமையாக சேதம் அடைந்து காணப்பட்டன.

இந்த வீடுகளை இராணுவத்தினர் மீள திருத்திக்கட்டியதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உடனடியாகவே அந்த வீடுகளில் குடியிருக்கவும் வழி ஏற்படுத்தினார்கள்.

இந்தப் பணியில் சுன்னாகம் மல்லாகம் மற்றும் உடுவில் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று முழு நாளும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

முறிந்து வீழ்ந்த மரங்களை தறித்து துப்பரவு செய்ததுடன் சேதமடைந்த வீட்டையும் நிர்மானித்துக் கொடுத்துள்ளார்கள்.இதே வேளை முழுமையாக பாதிக்கப்பட்டு திருத்தப்படாத மற்றுமொரு வீட்டை இன்று செவ்வாய்க்கிழமை திருத்திக்கொடுக்கவுள்ளதாக சுன்னாகத்தில் நிலை கொண்டுள்ள கெமுனு 14 வது படைகளின் கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

நலன்புரி முகாமிலுள்ள வலி. வடக்கு மக்கள் புயலால் பாதிப்பு

Related Posts