மிக அவசிமின்றி யாரும் வெளியில் செல்ல அனுமதி இல்லை – பிரதிப் பொலிஸ் மா அதிபர்!!

ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் மிக அவசர தேவையின்றி வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை என்றும், ஒரு பிரதேசத்திருந்து இன்னொரு பிரதேசத்திற்கு செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்hறு தெரிவித்தார்.

‘ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் ஒரு பிரதேசத்திருந்து இன்னொரு பிரதேசத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடைக்கப் போவதில்லை.

அனுமதி அளிக்கப்பட்ட சுகாதாரத் தேவைகள், மருத்துவத் தேவைகள், அத்தியாவசிய தேவைகளைக் கொண்ட வாகனங்கள் தவிர்ந்த வேறு வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்போவதில்லை.

அவ்வாறு அனுமதியுடன் செல்லும் வாகனங்களும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

வேறு எவருக்கும் பயணம் செல்வதற்கு அனுமதி இல்லை.

ஊடங்குச் சட்டம் நீக்கப்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் சந்தைக்கு, அல்லது அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களுக்கு மட்டும் செல்ல வேண்டுமே தவிர வேறு தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.’

Related Posts