Ad Widget

மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது ரியோ ஒலிம்பிக் போட்டிகள்

2016ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை வாணவேடிக்கைகளுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.

d

Rio 2016 Olympics-1

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்கள்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை 4.30 மணியளவில் தொடங்கியது.

தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வுபூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைப்பெற்று வருகிறது.

ஐ,நா. சபை தலைவர் பான் கீ மூன் உட்பட உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர் இன்று ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை கண்டுகளித்து வருகிறார்கள்.

மேலும் படங்களுக்கு..

Related Posts