மாவை, கலட்டி குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பம்

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாவை, கலட்டி பகுதிகளில் ஐ.நாவின் அகதிகள் உயர்தானிகராலயத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் திட்டம் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறிமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு இந்த திட்டங்களை ஆரம்பித்துவைத்தனர்.

40 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த குடிநீர்விநியோகத்திட்டத்தின் மூலம் 290 குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.

அதேவேளை ஐ.நாவின் அகதிகள் உயர்தானிகராலயத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட பொது நோக்கு மண்டபமும் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

mavai_water1

mavai_water3

Related Posts