மாவீர்ரகளை கௌரவிக்க புதுக்குடியிருப்பில் கதவடைப்பு!!

மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீர்ரகளை கௌரவிக்கும் முகமாக வழமை போன்று இன்றும் (27) புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான கதவடைப்பை மேற்கொள்ளவுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி இன்றைய தினம்(27) மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருவதோடு நடைபெறவிருக்கும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts