கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிய முன்னாள் போராளிகள் கிளிநொச்சி பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பபட்டுள்ளனர்.
மாவீரர்களுக்கான பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.சம்சநாதன் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த பேராளிகளை கிளிநொச்சி பொலிஸார் இன்று விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.
மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இணைந்து இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.
இந்த நிலையிலேயே, குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் நிர்மானிக்கப்பட்ட பொதுக் கல்லறையை பார்வையிட்ட கிளிநொச்சி பொலிஸார், குறித்த கட்டுமான பணிகளை இடைநிறுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
போர் வெடிக்கும்! கிளிநொச்சியில் துண்டு பிரசுரங்கள்!
மாவீரர் துயிலுமில்லத்தில நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலிஸாரினால் இடைநிறுத்தம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உருப்பெறுகிறது பொதுக்கல்லறை