மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

யாழ். மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்கும் வகையிலான தீர்மானமொன்று, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களான வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், இதற்கான பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்மொழிந்தார்.

யாழ். மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகள், தாவரவியல் பூங்காவாக பராமரிக்கப்பட வேண்டுமென குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ராணுவம் நிலைகொண்டுள்ள காணிகளை தற்போது பொறுப்பேற்க முடியாதென்றும், ராணுவம் வெளியேறிய பின்னரே அதைப் பற்றி தீர்மானிக்க முடியுமென்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு, ஏனைய துயிலும் இல்லங்களின் காணிகளை அடையாளம் கண்டு, பிரதேச சபைகளிடம் அவற்றை ஒப்படைத்த பின்னர் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Posts