கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச சபை ஊடாக சிரமதானம் செய்து புனித பிரதேசங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்று வருகிறது.
இணைத்தலைவா்களான வடமாகாண முதலமைச்சா் சிவி. விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினா்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது காணிகள் சுவிகரிப்பு அதிகரித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சா் சிவி. விக்கினேஸ்வரன் தனது அறிமுக உரையில் தெரிவித்தார்.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கிராமிய அபிவிருத்தி தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை விவசாய சங்கத்தினர் வழிமொழிந்த நிலையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.