மாவீரர் தின நோட்டீசுடன் மிருசுவில் , மீசாலை பகுதியில் மூவர் கைது

மாவீரர் தின நோட்டீசுடன் மீசாலை புத்தூர் சந்தி மற்றும் மிருசுவில் பகுதியில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நேறடறு பகல் மிருசுவில் பகுதியில் வைத்து இருவரைக் கைது செய்த கொடிகாமம் பொலிஸார் மாலை புத்தூர் சந்திப்பகுதியில் மேலும் ஒருவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

மேலும் இவர்களிடமிருந்து மாவீரர் தின நோட்டீசுகள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சரியான தகவல் இன்னமும் வெளிவரவில்லை. எனினும் இன்றைய தினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாகரனின் பிறந்த நாளும் நாளையதினம் மாவீரர் தினமும் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

எனவே குறித்த நாட்களை அனுஷ்டிப்பதைத் தடுப்பதற்கான செயற்பாடுகளில் இராணுவம் மற்றும் பொலிஸாரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts