மாவீரர் தினத்துக்கு விளக்கேற்றியதாக விசாரணை?

மாவீரர் தினமான கடந்த 27ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண ஊழியர்கள் இருவர், விளக்கேற்றியமை தொடர்பில் அந்த இரு ஊழியர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

மேற்படி இரண்டு ஊழியர்களும், யாழ்ப்பாண வளாகத்துக்குள் விளக்கேற்றியதாக கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமது சகோதரர்கள் உயிர்நீர்த்ததாகவும் அதனால் தான் விளக்கேற்றியதாகவும் அதற்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த இரு ஊழியர்களும் கூறியுள்ளனர்.

ஆனால், விசாரணை மேற்கொண்டது தொடர்பில் பொலிஸ் தரப்பு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

Related Posts