யாழ்.வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை தீருவிலில் கடந்த வருடம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதனையடுத்து அங்கு சென்ற ஏற்பாட்டு குழு இளைஞர்களை, கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யக் கூடாதென எச்சரித்துள்ளார். அவ்வாறு மேற்கொண்டால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார்.
இதேவேளை, வல்வெட்டித்துறை பிரதேச ஊடகவியலாளர் ஒருவரையும் குறித்த பொலிஸ் அதிகாரி அழைத்து, மாவீரர் தினம் தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாதென எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.