மாவீரர்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இன்று காலை நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில் அவர் மாவீரர்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்றதோடு, இதில் உயிர்நீத்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.

sivaji-nalloor-1

மாவீரர் தினத்தினை முன்னிட்டு வடக்கில் கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ள நிலையிலும் அவர் இன்று தமது அஞ்சலியினையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பெரிய தேவாலயம் முன்றலிலும் மாவீரர்களை அஞ்சலித்தமை குறிப்பிடத்தக்கது.

sivaji-nalloor-2

Related Posts