மாவீரன் கிட்டு படத்தின் திரைக்கதையில் மாற்றம்: படக்குழு அறிவிப்பு!

சுசீந்திரன் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு படம் சமீபத்தில் வெளியானது. விஷ்ணு, விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் எழுதுவதுடன் இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகியுள்ளார் கவிஞர் யுகபாரதி.

இந்தப் படத்துக்கு வந்த விமரிசனங்களைத் தொடர்ந்து இதன் திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்றுமுதல் திரைக்கதையின் சுவாரசியத்தை முன்னிட்டு படத்தின் இரண்டாம் பகுதியில் திரைக்கதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts