வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய காம்யோற்சவம் நேற்று புதன் கிழமை பகல் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் உற்சவம் நடைபெறவுள்ளது. 06ஆம் திகதி சண்முக திருநடன விழாவும் 21ஆம் திகதி திங்கட்கிழமை திருக்கார்த்திகை திருவிழாவும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவும் 26ஆம் திகதி சனிக்கிழமை ஆடி அமாவசையையொட்டி கீரிமலை கண்டாங்கி தீர்த்தத்தில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்தைத் தொடந்து திருவிழா நிறைவடையவுள்ளது.
ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் காலை முதல் இரவு வரை மாவிட்டபுரம் யாழ்ப்பாணத்திற்கான தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சேவைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழமை போன்ற இருபத்தைந்து நாட்களும் அன்னதானம் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை அன்னதான சபையினர் மேற்கொண்டுள்ளார்கள்.