உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 10 ஆம் இடத்தைப் பெற்ற மானிப்பாய் மகளிர் கல்லூரியின் மாணவி நிரோஜினிக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சைக்கிள் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
சித்தங்கேணி நாமகள் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் மானிப்பாய் மகளிர் கல்லூரி அதிபர் ஜெ.ஜெயராணி, வலி.மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி நா.ஐங்கரன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.