மாளிங்கவும் அவரது அணியும் ஐ.பி.எல். சாதனை

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுக்களைப் பெற்ற முதலாவது பந்து வீச்சாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாளிங்க சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

தில்லி டெயா டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மாளிங்க வீழ்த்திய 02 விக்கெட்டுக்களுடன் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. லசித் மாளிங்க இதுவரையில் 105 ஐ.பி.எல். போட்டிகளில் கலந்துகொண்டு 151 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இலகு வெற்றியொன்றைப் பெற்றுள்ளது.

ஐ.பி.எல். போட்டியில் கலந்துகொண்ட ஒரு அணி, அதிகூடிய ஓட்டங்களுடன் பெற்ற முதலாவது வெற்றியாக நேற்றைய போட்டியும் சாதனைப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

Related Posts