மாலிங்க போட்களில் கலந்துக் கொள்வதற்கான உடற்தகுதியுடன் காணப்படுகின்றார்!

உபாதை காரணமாக மிக நீண்டகாலமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலிகியிருந்த லசித் மாலிங்க, போட்களில் கலந்துக் கொள்வதற்கான உடற்தகுதியுடன் காணப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வைத்திய குழு அறிவித்துள்ளது.

மாலிங்க போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியும் என வைத்திய குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் விளையாடுவதற்கான பூரண உடற்தகுதியை கொண்டுள்ளார் என வைத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் அர்ஜுன த சில்வா தெரிவித்துள்ளார்.

அடுத்தபடியாக இலங்கை அணி ரி-ருவெண்ரி போட்டியொன்றிலேயே விளையாடவுள்ளது. அதில் மாலிங்கவும் இணைந்து விளையாடலாம். தேர்வுக் குழுவொன்றை தெரிவுசெய்ய வேண்டும். அதன் பின்னர் லசித் மாலிங்க விளையாடுவாரா இல்லையா என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையே எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts