யாழ். மாநகர சபையினால் கனகரட்ணம் வீதி புனரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதால் மாற்று வீதியை பாவிக்குமாறு யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தின் வீதிப் புனரமைப்பு பணிகள் துரித கதியில் மேற்கொண்டு நிறைவு செய்ய வேண்டியுள்ளதால், கனகரட்ணம் வீதியை பாவிப்பவர்கள் குறித்த வீதி வேலை நிறைவடையும் வரை நாயன்மார்கட்டு வீதியை ஒரு மாற்றுப் பாதையாகவும் இராமநாதன் வீதி மற்றும் திருமகள் வீதிகளை மற்றொரு மாற்றுப் பாதையாகவும் பாவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.