மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கவுள்ளதாக அச்சுவேலி இராஜமாணிக்கம் திருமண மண்ட நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் 06ஆம் திகதி, வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலவசமாக தாலி, பட்டுப்புடவைகள், வேட்டிகள், வாழ்வதார உதவி மற்றும் வீட்டுத்தளபாடங்கள் என்பன திருமணத்தின்போது வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், திருமண செலவுகளையும் இராஜமாணிக்க திருமண மண்ட நிர்வாகத்தினர் ஏற்கவுள்ளனர்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமது விண்ணப்ப படிவங்கயை பதிவுத்தபாலில் தலைவர், இராஜமாணிக்கம் கல்யாணமண்டபம், பிரதான வீதி, அச்சுவேலி என்ற முகவரிக்கு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க கூடியவாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.