கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொடுப்பது தொடா்பாக உரிய அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு விபரங்கள் அனுப்ப வேண்டியிருப்பதனால் வாகனங்களை பாவிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய விபரங்களை கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோா் சங்கத்திடம் வழங்குமாறு குறித்த சங்கம் அறிவித்துள்ளது.
சாரதி அனுமதி பத்திரம் தேவையான மாற்றுத்திறனாளிகள் முதலில் தங்களுடைய விபரங்களை கிளிநொச்சி உதயநகா் முத்துமாரி அம்மன் வீதியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் எதிா்வரும் 16-01-2017 இற்கு முன்னதாக வழங்குமாறும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.