மாற்றுத்திறனாளிகளால் யாழ்ப்பாணத்தில் புதியதொரு முயற்சி!

சுயதொழிலை அடிப்படையாக கொண்டு தாமே யாழ்ப்பாணத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவி, ஓர் உற்பத்திப்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளனர். நாம் பாவிக்கும் சன்லைட் (sunlight) சவர்க்காரம், Surfexel அல்லது சம்போ(shampo)க்கு பதிலாக புதிதாக ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். மேலும் இதில் வாசனைக்காக compfort போன்ற ஒரு கலவையயையும் சேர்த்துள்ளனர். இதனால் சலவை செய்யும் ஆடைகள் வாசனையாகவும் இருக்கும்.

யாழ்ப்பாணம் கல்வியன்காட்டிலே இவர்களின் தொழிற்சாலை உள்ளது. 0773692343 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டால் உற்பத்திப்பொருளை உங்கள் தேவைக்கேற்ற வகையில் பெற்றுக் கொள்ளலாம்.

இவர்களது இந்த முயற்சிக்கு நாம்தான் ஊன்று கோலாக இருக்கவேண்டும். அடுத்தவர் உதவியின்றி தாமே உழைத்து வாழவேண்டும் என்ற மன உறுதியுடன் கூட்டாக செயற்படுகின்றனர். எமது உள்ளூர் கண்டுபிடிப்பை பயன்படுத்தி எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வழிவகுப்போம்.

shine-2

shine-1

Related Posts