மாற்றப்பட்ட காலாவதி திகதிகள்

நுகர்வோரை ஏமாற்றும் வகையில் காலாவதி திகதியை மாற்றி விற்பனை செய்த பிரபல நிறுவனத்தின் பொருட்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த சபையின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார். .

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் தேடுதல் நடத்திய வேளை மரக்கறி விதைகளை கொண்ட ரின்கள் வியாபார நிலையத்தில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

எனினும் குறித்த ரின்களில் காலாவதித் திகதியை விட விற்பனை முகவர்கள் மூலமாக வேறொரு திகதிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானித்த அதிகாரிகள் குறித்த பொருட்களை பறிமுதல் செய்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ரின்களில் அடைக்கப்பட்டுவரும் பண்டங்களில் அந்த நிறுவனத்தினால் காலாவதித் திகதி, உற்பத்தி திகதி என்பன பதிவு செய்யப்படும் . எனவே நுகர்வோர் அந்த திகதிகளை சரிபார்த்து பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் ஸ்ரிக்கர் துண்டுகளில் காலாவதி திகதி, உற்பத்தி திகதி என்பன பதிவு செய்யப்பட்டு ஒட்டப்படும் சந்தர்ப்பங்களில் மிக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Posts