மாற்றங்களுடனான புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று!

மாற்றங்களுடனான புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தொடர்ந்து தாமதிக்கப்பட்டுவந்த அமைச்சரவை மாற்றமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, மாற்றங்களுடனான புதிய அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறுகிறது.

இதேவேளை, புதிய அமைச்சரவை மறுசீரமைப்புடன் ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் உரித்தான பொறுப்புக்கள் விரைவில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts