மார்வன் அதபத்துவின் பெரியம்மா கொலை செய்யப்பட்டார்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் மார்வன் அதபத்துவின் பெரியம்மா கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெலிகம பிரதேசத்தில் முதுகமுவ அதபத்து வத்தையில் வசித்து வந்த சோமா அத்த பத்துவே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது பணியாளுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி பணியாள் வெளி வேலை காரணமாக அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர் அடுத்த நாள் காலை அவர் எஜமானியின் வீட்டுக்கு வந்துள்ளதுடன், வீட்டுக் கதவை பலதடவை தட்டியுள்ள போதிலும் அதை யாரும் திறக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்துள்ள பொலிஸார் கதவை உடைத்து உள்ளே நுழைந்த வேளையில் வீட்டின் எஜமானி கொலைசெய்யப்பட்டுள்ளதை கண்டுள்ளனர்.

அவரது கழுத்து, கைப்பேசி சார்ஜரின் வயரினால் நெரிக்கப்பட்டிருந்துள்ளது. வெட்டுக் காயங்களையும் காணக்கிடைத்துள்ளது.

பின்னர் பொலிஸார் மோப்ப நாய்களை வைத்து சோதனை நட த்திய வேளையில் அந்நாய்கள் அருகில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளன.

அவ்வீடு மார்வன் அதபத்துவின் , தந்தைக்குரியதென எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts