மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக பிரகடனம்!

எதிர்வரும் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இதுபோன்றதொரு காலப்பகுதி அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts