மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு!

யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச் மாத காலப் பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 4600 ஏக்கர் நிலப்பரப்புகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இலங்கையிலுள்ள 31 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஆயிரம் குடும்பங்கள் வரை இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களை மீள்குடியேற்ற காணிகளை பெற்றுக் கொடுப்பது குறித்து தற்போது வரை பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts