மார்கழிக்குள் முழுமையான மீள்குடியேற்றத்திற்கு முயற்சிப்பேன் : எதிர்க்கட்சித் தலைவர்

இந்த வருடம் மார்கழி மாதத்திற்குள் வளலாய் பகுதி மக்களை முழுமையாக மீள்குடியேற்ற முயற்சிகள் எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உறுதியளித்தார்

இன்றைய தினம் மீள்குடியேற்றப்பட்ட. வளலாய் பகுதி மக்களை எதிர்க்கட்சித்தலைவர் சந்தித்து பேசுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

தமிழ் மக்களுக்கு கெட்டகாலம் போய் நல்ல காலம் மலர்ந்துள்ளது.முதலில் முழுமையான மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கிறேன். அதன் பின்னர் அடிப்படை வசதிகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் நீங்கள் உங்கள் குழந்தைகளை நன்றாகக் கல்வியில் வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும், கல்வியே எதிர்கால சொத்து என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts