மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வு

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 19வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வகடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

அக்கராஜன் பிரதேச விளையாட்டுத் திடலில் காலை 10 மணிக்கு மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் வணக்க நிகழ்வுகளுடன் ஆரம்மான நிகழ்வில் பொதுச் சுடரினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஏற்ற்றிவைக்க மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து வீரர்களின் உறுதிமொழியேற்பு நிகழ்வினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளர் கிந்துஜன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்ததைத் தொடந்து தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆரம்ப போட்டிக்கான பூவா தலையா தெரிவினை மேற்கொள்ள மன்னகுளம் அ.த.க பாடசாலை அதிபர் செந்தில்நாதன் துடுப்பாட்டப் போட்டியை ஆரம்பித்துவைத்தார்.

குறித்த மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் 30 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts