மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தளர்வு

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தற்போது தளர்வு நிலை ஏற்பட்டுள்ளது.

manippay-maruthady

அண்மையில் நீண்டகாலப் புனரமைப்பின் பின் கும்பாபிஷேகம் கண்ட இவ்வாலயத்தில் குறித்த ஆலய தர்மகத்தா குழுவினரால் ஆலயத்திற்குள் வழபடச்செல்லும் ஆண்கள் ஷேட் அணியாமல் வேட்டியுடனும் பெண்கள் பஞ்சாபி முதலிய ஏனைய ஆடைகள் தவிர்த்து சேலையுடனும் வரவேண்டும் என்ற சட்டம்விதிக்கப்பட்டதால் அடியவர்கள் குறிப்பாக பெண்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியதோடு பல்வேறு விசனங்களும் வெளியிடப்பட்டன.

ஆனால் தற்போது ஆலயத்தின் சார்பாக நடந்த தர்மகர்த்தா சபைத்தேர்தலில் புதிய தர்மகர்த்தா ஒருவர் வெற்றி பெற்றதால் ஆடைக்கட்டுப்பாடுகளில் தளர்வு நிலை ஏற்பட்டுள்ளது.

Related Posts