மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று (02) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு கோபுரங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று 9.30 மணிக்கு மூல மூர்த்திக்கும் அதனை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

மருதடி விநாயகர் ஆலயம் கடந்த 2004ம் ஆண்டு முதல் 10 வருடகாலமாக கருங்கல்லினால் புனர்ஸ்தானம் செய்யப்பட்டு வந்தது.

ஆலய சிற்ப வேலைகளுக்கு இந்தியாவில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு கருங்கல்லில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டன.

ஆலய புனர்ஸ்தாபன வேலைகளுக்காக 25 கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

manippay -maruthady - 1

manippay -maruthady - 2

manippay -maruthady - 3

manippay -maruthady - 4

manippay -maruthady - 5

manippay -maruthady - 6

manippay -maruthady - 7

manippay -maruthady - 8

manippay -maruthady

Related Posts