மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை சம்பியன்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆண்களுக்கான போட்டியில், மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை சம்பியனாகியது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஆதரவுடன் நடத்திய கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.

இவ் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியும் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியும் மோதின.

முதற்பாதியாட்டத்தில் ஏஞ்சல் அணி 11:10 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்து அணி 13:12 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது. மூன்றாவது பாதியாட்டத்தில் ஏஞ்சல் அணி தனித்திறமையுடன் விளையாடி 23:12 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது.

நான்காவதும் இறுதியுமான பாதியாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்து அணியின் ஆதிக்கம் நிலைபெற்றபோதும், அதிக புள்ளிகளை பெறமுடியவில்லை. நான்காவது பாதியாட்டத்தில் யாழ். இந்து அணி 13:07 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது.

மொத்தப்புள்ளிகளின் அடிப்படையில் மானிப்பாய் ஏஞ்சல் அணி, 53:48 புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனாகியது.

Related Posts