யாழ்ப்பாணம் மானிப்பாயில் 8 மாத ஆண் சிசு ஒன்று மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளது.
மூச்சுத் திணறல் காரணமாக நேற்று (17) காலை தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிசு, சில மணி நேரங்களில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிசுவின் உயிரிழப்புக் காரணம் தெரியாத நிலையில், சடலத்தைப் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
தற்போது யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், சிசு மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளமை, கொரோனா உயிரிழப்பா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.