மானிப்பாயில் வயோதிப் பெண் திட்டமிட்ட கொலை?

மானிப்பாயில் வயோதிபப் பெண் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் கல்லூரி ஒழுங்கை என்ற விலாசத்தில் தனித்து வாழும் நாகரத்தினம் குமராசாமி (வயது-88) என்பவரது வீட்டில் வைத்தே அவரை பராமரிப்பதற்கு பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்ணே கொலை செய்யப்பட்டார்.

மானிப்பாய், சங்கபிள்ளை வீதியைச் சேர்ந்த தம்பையா லீலாதேவி (வயது -60) என்ற வயோதிப் பெண்ணே கொலை செய்யப்பட்டார்.

“பிச்சை கார் போல் வந்த நபர் கழுத்தில் கத்தியால் அறுத்து கொலை செய்து தப்பி சென்று விட்டார். இந்த பெண்மணிக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் 25 வருடங்களாக நடந்து வந்த காணி வழக்கில் இவர் உடைய காணி என்று மிக விரைவில் தீர்ப்பு வழங்க இருப்பதாக தகவல். இதனால் ஏதிராளிகள் செய்து இருக்கலாம் என சந்தேகம்.

முதலில் இவர் பிச்சை எடுப்பது போல் வந்து பிச்சை எடுத்து விட்டு நோட்டம் பார்த்து விட்டு மீண்டும் வந்து பிச்சை கேட்பது போல் நடித்து வீடு புகுந்து இந்த கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மக்கள் சந்தேகத்தின் பேரில் ஆனைக்கோட்டைப் பகுதியில் நடமாடிய மனநோயாளி பிச்சை காரரை பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

முன்னர் வெளியிட்ட செய்தி

Related Posts