மானிப்பாயில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை!

மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள வீடொன்றிலில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீடு புகுந்த இருவர் பெண்ணை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் (28) இடம்பெற்றது.

நீலாதேவி (வயது -69) என்ற பெண்ணே உயிரிழந்து குருதி வெள்ளத்தில் மீட்கப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சம்பவம் இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts