மானிப்பாயில் கடத்தப்பட்டவர் மீட்பு; நால்வர் கைது

arrest_1மானிப்பாயில் நபர் ஒருவரை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

மானிப்பாய் பகுதியில் உள்ள இவர் கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு 10 லட்சம் ரூபா பணம் கொடுக்கவேண்டிய நிலையில் 4 பேரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கைதானவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட வாய்முறைப்பாட்டில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாகவும், குறித்த நபரை கைதுசெய்த பின்னர் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறுமென்றும், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள 4 சந்தேக நபர்களும் மேலதிக விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கடத்தப்பட்டவர் மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலில் ஈடுபட்ட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts