மானிப்பாயில் அதிரடி தேடுதல்: நால்வர் கைது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போது நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் போல் சென்ற பொலிஸார், இவர்களை நேற்று (திங்கட்கிழமை) மாலை கையும் மெய்யுமாக மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களில் பெண்கள் இருவரும் அடங்குவதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனரர்.

சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இன்றைய தினம் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

Related Posts