மானிப்பாயில் அடாவடி ஈடுபட்ட கும்பலில் மூவர் கைது

மானிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் சம்மந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (8) பகல் புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த வீட்டின் வாசல் படலை,
வீட்டு முற்றத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி மற்றும் வீட்டின் யன்னல்களைய கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பித்தது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நாவாந்துறையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் இணுவிலைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் தாக்குதல் நடத்தப் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.

Related Posts