மாநகர சபை ஊழியர்களின் தொழிற் சங்க போராட்டம் கைவிடப்பட்டது

jaffna_municipalயாழ். மாநகர சபை ஊழியர்களின் தொழிற் சங்க போராட்டம் கைவிடப்பட்டதுள்ளதாக யாழ். மாநகர சபை சுகாதார குழு தலைவர் சுதர்சிங்க விஜயகாந் நேற்று தெரிவித்தார்.

யாழ். கொட்டடி மீன் சந்தையில் மாநகர சபை ஊழியர்களுக்கும் நாவாந்துறை மீன் வியாபாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாவாந்துறை மீன் வியாபாரிகள் 16 பேர் கொண்ட குழுவினர் யாழ். மாநகர சபை ஊழியர்கள் ஜவர் மேல் வாள்வெட்டு மேற்கொண்டதுடன் தாக்குதல்களையும் நடத்தினர்.தாக்குதல் மேற்கொண்ட 16 பேரையும் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி சம்பளத்துடனான விடுமுறை, மருத்துவ செலவு உட்பட எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடமபெறாது இருக்க ஊழியர்களுக்கான பாதுகாப்பு வழங்க கோரியும் வட மாகாண ஜக்கிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினமும் நேற்றும் தொழிற் சங்க போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்த தொழிற்சங்க போராட்டத்தின் போது, தாக்குதல்களை மேற்கொண்ட 16 பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டு, யாழ். பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் படிப்படியாக ஒவ்வொருவரையும் பொலிஸார் கைதுசெய்வார்கள் என்றும், அத்துடன், யாழ். மாநகர சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றியுள்ளதாகவும் கூறப்பட்ட பின்னர் தமது தொழிற் சங்க போராட்டத்தினை கைவிட்டு மீண்டும் தமது பணிகளை தொடர்ந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts