மாதவன் தமிழ் சினிமாவின் சொத்து – சூர்யா

மாதவன் நடிப்பில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் தமிழ் படம் ‘இறுதிச்சுற்று’. இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது. இப்படத்தை சுதா கே.பிரசாத் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சூர்யா, பாலா, சித்தார்த் ஆகியோர் பங்கேற்றனர். படத்தின் ஆடியோவை பாலா வெளியிட சூர்யா பெற்றுக்கொண்டார்.

பின்னர் சூர்யா பேசும்போது, ‘மேடி’ மாதவன் என்னுடைய சகோதரர். அவரிடம் நான் எல்லா விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன். அவர் நம்முடைய சொத்து. இந்தி மற்றும் எந்த மொழிகளிலும் நடித்தாலும் நமக்கான சொத்து அவர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடைய நடிப்பில் படம் வெளியாவது பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. எல்லோரையும்போல் நானும் இந்த படத்திற்காக ரொம்பவும் ஆவலோடு காத்திருக்கிறேன் என்றார்.

Related Posts